அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 90% பேரை எடப்பாடி தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களையும் 90 சதவிகிதம் பேரை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ஓபிஎஸ், தொண்டர்களை மட்டுமே நம்பி இருக்கிறார். அதே நேரம் முன்னாள் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோர முடிவு எடுத்து இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரைக்கும் அதிமுகவில் இருந்து அவராலும் அவரது ஆதரவாளர்களால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள், எம்பிக்கள் , மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பட்டியலை ஓபிஎஸ் தரப்பு ரெடி செய்து இருக்கிறது.
அதைப் பார்த்ததும் ஓபிஎஸ்-க்கு நம்பிக்கை வந்து விட்டதாம். அந்த லிஸ்ட் அவ்வளவு நீளத்திற்கு இருக்கிறதாம். இதில் உள்ளவர்களை எல்லாம் சந்தித்து ஆதரவு கோரினாலே கட்சியில் தன் பக்கம் பெரும்படை திரண்டு நிற்கும் என்று நினைக்கிறாராம். கட்சியின் அதிகாரம் தன் கைக்கு வந்து விட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் புதிய பொறுப்புகளை வழங்குவார் ஓபிஎஸ் என்று அவர்களிடம் கூறி எடப்பாடி அதிருப்தியாளர்களை ஓபிஎஸ் பக்கம் இழுப்பதற்கான வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பு.
Leave a Reply