புதுடெல்லி: குஜராத்தின் வல்சாத் மாவட்டம், தரம்பூரை சேர்ந்த ராஜ்சந்திரா அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்படி தரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ்சந்திரா மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். ராஜ்சந்திரா கால்நடை மருத்துவமனை, மகளிர் திறன் மேம்பாட்டு மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ...
ஊட்டி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊட்டி அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மாற்றுத் திறனாளி நலத் துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு தலைமை தாங்கி வனத்துறை அமைச்சா் ...
கோவை: கோவையில் வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும் தனது ஆதரவாளர்களை பெருமளவில் திரட்டிக்காட்டி தனது செல்வாக்கை உணர்த்தும் வகையில் அந்தக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பான முன்னெடுப்பு பணிகளை கோவை செல்வராஜ் மெல்ல ஆரம்பித்திருப்பது கவனிக்கத்தக்கது. ...
கடந்த 26ம் தேதி 5 ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகேற்றன. இந்த ஏலத்தின் முதல் நாளன்று, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்று கூறப்பட்டது. அதேபோல் கடந்த ...
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...
ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு ...
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் ...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கெதிராக வெடித்த மக்களின் போராட்டத்தால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர். அதைத் தொடர்ந்து முதலில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பின்னர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில் இந்தியாவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பல்வேறு ...
நாட்டில் சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்ப்பதற்காக ‘ஃபாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகம் ...
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு கடந்த மாதம் 29 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை வந்தபோது, ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு தரப்பு நேரிடமும் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கும், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன ...