புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி- கவர்னர் தமிழிசை தகவல்..!!

புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது மத்திய பிரதேசத்தில் இந்தி வழி மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவர முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தப்படும் இதற்காக குழு அமைக்கப்படும்
தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடியவில்லை என்றாலும் விருப்பப்பட்டவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்படும் அதற்காக புத்தகம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டு ஆறு மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்கள் தமிழில் தயாரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் பிரதமர் மோடி எந்த மொழியையும் திணிக்கவில்லை அவர் சொன்னது தொழில் கல்வியில் உங்கள் மொழியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று தான் கூறினார். எனவே மருத்துவ கல்லூரி ஆக இருந்தாலும் பொறியியல் கல்லூரி ஆக இருந்தாலும் தாய் மொழியில் படித்தால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் ஜெர்மனி மற்றும் சைனாவில் தாய்மொழியில் தான் படிக்கின்றனர் எனவே மருத்துவர் என்ற முறையில் முதல் முறையாக புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன் மேலும் அவர் கூறியதாவது பாண்லே நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால் 25 ஆயிரம் லிட்டர் குறைவாகத்தான் கிடைக்கிறது கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம் அங்கு தொடர்ந்து மழை பெய்வதாலும் பண்டிகை காலம் என்பதாலும் கடந்த இரு தினங்களாக 25 ஆயிரம் லிட்டர் பால் நமக்கு கிடைக்கவில்லை இந்த பற்றாக்குறையை சரி செய்ய கர்நாடக அரசுடன் முதல்வர் பேசியுள்ளார் அதனை ஒட்டி பத்து ஆயிரம் லிட்டர் பாலுக்கு உடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எஞ்சிய 25 ஆயிரம் லிட்டர் பாலை 3 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்