இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், அசோக் நகர் காவல் நிலையத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி ...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவுகத் மிர்சியோயேவ்-ன் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில் ...

மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “பாண்டியர் காலத்தில், தமிழ் வளர்க்கப்பட்ட மதுரையில் தற்போது தொழில்துறை வளர்கிறது . புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்மாநிலங்களை சேர்ந்தவை. மதுரையில், சிறு, குறு, நடுத்தரத் ...

சென்னை : எனது பதவி தொண்டன் கொடுத்த பதவி. பர்மனன்ட் பதவி. ஸ்டாலின் சொல்வது போல டெம்பரவரி பதவி இல்லை. ஸ்டாலின் அவர்களே உங்களைத்தான் உங்கள் அப்பா கடைசி வரை நம்பாமல் டெம்பரவரி பதவியிலேயே வைத்திருந்தார் என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சென்னை வடபழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் ...

அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே ...

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதால், அத்தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்படுகிறது.இது குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் கு.க.செல்வம், டாக்டர் சரவணன் ஆகிய இருவரும் பா.ஜ.,வில் ...

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரபடுத்தபட்டுள்ளது. அதை படித்து பார்த்தாலே விளங்கும். அ.தி.மு.க. ...

கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- தி.மு.க.வில் பி டீம் ஒன்று உள்ளது. கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருக்கும் அமைச்சர் என்னுடன் பணியாற்றிவர். அ.தி.மு.க.வில் ...

பேரூராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல்:  கோவையில் சாலை மறியல கோவை, சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி உட்பட்ட பாலு கார்டன் பகுதியில் சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் விட்ட பணிகளை கோவை வந்த போது அண்மையில் துவக்கி வைத்தார். இப்பணிகளுக்காக நில அளவைப் பணிகள் மேற்கொண்ட போது ஒரு குறிப்பிட்ட ...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை தவிர்த்து இதர 37 மாவட்டங்களில் இன்று நடைமுறைக்கு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் ...