பாஜக-வில் இ ணைகிறார் திமுக எம்.எல்.ஏ.,? அண்ணாமலையின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி..!!

ரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதால், அத்தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்படுகிறது.இது குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் கு.க.செல்வம், டாக்டர் சரவணன் ஆகிய இருவரும் பா.ஜ.,வில் இணைந்தனர். தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னும், அதிருப்தியாளர்கள் சிலர், பா.ஜ.,வில் இணைந்தனர். அண்ணாமலை சுற்றுப்பயணம் சென்ற மாவட்டங்களில், தி.மு.க.,வினர் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.வளர்ந்து வரும் அண்ணாமலை செல்வாக்கை தடுக்கும் வகையில், தி.மு.க.,வில் இருந்து சென்றவர்களை மீண்டும் இழுக்கும் படலத்தில், அக்கட்சி தலைமை இறங்கியுள்ளது. கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.,வில் இணைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்த சரணவனையும் ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.மேலும், சிவகங்கை மாவட்ட தி.மு.க.,விலிருந்து பா.ஜ.,வுக்கு சென்ற நிர்வாகிகளையும் இழுக்கும் பேச்சில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுஉள்ளனர்.

இதனால், தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ., ஒருவரிடம் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. அவரை பா.ஜ.,வில் சேர்க்கும் பூர்வாங்க பேச்சு வெற்றிகரமாக முடிந்துள்ளது.பா.ஜ.,வில் இணையும் பட்சத்தில், அவர் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் காலியாகும் அத்தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்