குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக் கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் @NCRBHQ தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற ...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடி வி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை மீனாட்சி மெஷின் மருத்துவமனையில் டிடிவி தினகரன் அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ...
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை எனவும், அவர் சொந்த பணத்தை செலவிட்டு வருவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களின் செயல்பாடு, அரசு திட்டங்கள் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை ...
பிரிட்டன் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரிட்டனுக்காகவும், கன்சர்வேட்டிவ்(பழமைவாதக்கட்சி) இரவுபகலாக உழைப்பேன் என்று இந்திய வம்சாவழி வேட்பாளர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும். அந்த வகையில் இந்திய ...
விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 307-ஆவது பிறந்த நாளான இன்று ...
எட்டு வழி சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பூலிதேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியின் ...
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலth தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ (90) உடலநலக் குறைவால் உயிரிழந்திருப்பது, அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,சோனியா ...
தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது ...
திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்வைத்து அக்கட்சியின் மூத்த தலைவ சசி தரூர் கூறிவரும் கருத்துகள் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. தற்போதைய ...