தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,666ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பெரும் ...

மருத்துவ நிபுணர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு மேகாலயாவுக்கு ஆதரவளிக்க தமிழ்நாடு அரசுடன் மேகாலயா அரசு, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரச் சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கு இடையே செய்யப்படும் முதல் மருத்துவக் கூட்டாண்மை ஆகும். சென்னை ...

சென்னை: பள்ளிகளில் காலையில் வழங்கும் உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காலை உணவு வழங்க தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். மதுரையில் உள்ள ...

சென்னை: தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசு திட்ட பயனாளிகளின் வாக்குகளைக் கவரவும் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. கடந்த ஆண்டு ...

தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். ...

மறைமலைநகர்: திமுக ஆட்சி அமைந்த 15 மாதங்களில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.759 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது தமிழ் மாநில மாநாடு நேற்று தொடங்கி நாளை வரை செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில் நடந்து வருகிறது. இதில் நேற்று மறைமலைநகரில் நடந்த ...

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.2011ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை வீழ்த்தி முதல் முறையாக முதலமைச்சரான மம்தா, அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கடுமையான சவாலையும் மீறி தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் ...

அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை வாங்குவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் யோசனை வழங்கியுள்ளது. புதுடெல்லி, தற்போது, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரம்வரை ரொக்கமாக நன்கொடை வாங்கலாம். அதற்கு மேல், காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலம் மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும், ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக ...

பொதுவாக விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு நாம் செல்வது வழக்கம். அப்படி பயணப்படும் நாம் தமிழகத்திற்குள் மற்றும் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்ல விசா கண்டிப்பாக தேவை. இந்த விசாக்களைப் பெற நாம் செல்லும் நாடுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் ...

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் ...