வருமான வரி வரம்மை ரூ. 8 லட்சமாக நிர்ணயம் செய்ய கோரி சென்னை , கோவையில் ஆர்ப்பாட்டம்- தந்தை பெரியார் திராவிட கழக அறிவிப்பு..!

கோவையில் தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு வருமானத்தில் அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் வருமான வரி செலுத்தும் வரம்பு ரூ. 5 லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது. ஆண்டிற்கு ரூ. 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்றால், 5 லட்சம் சம்பாதிப்பவர்களை பரம ஏழை என வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும். வருமான வரி வரம்மை அனைவருக்கும் ரூ. 8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை , கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.