பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி – முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரிப்பு..!

சேலம், காவேரி மருத்துவமனையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க கெளரவ தலைவருமான ஜி.கே.மணி நேற்று திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காதுகுத்து விழாவில் கலந்துகொண்டவர், கறி விருந்து சாப்பிட்டிருக்கிறார். அதன்பின்னர் செரிமாணப் பிரச்னை ஏற்பட்டு, அவர் அவதிப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒருகட்டத்தில் தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே அவர் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் தெரிவிக்காமல், நேற்று திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார்.

மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக ஜி.கே.மணியின் உடல்நிலை தேறி வருவதாக பா.ம.க-வினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணியின் உடல்நலம் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்திருக்கிறார்.