நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாடு – பிரதமா் மோடி பங்கேற்பு..!

ந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகின் வளா்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட சா்வதேச அமைப்பான ஜி20 அமைப்புக்கு, தற்போது இந்தோனேசியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி, ஜி20 மாநாடு அந்நாட்டின் பாலியில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொமனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். பிரதமா் மோடியின் இந்தோனேசியாவுக்கான பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறியதாவது: பாலியில் நடைபெறும் மாநாட்டில், ‘ஒன்றாக மீண்டெழுவோம், பலத்துடன் மீண்டெழுவோம்’ என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு உலகின் மிக முக்கியப் பிரச்னைகள் குறித்து உலகத் தலைவா்கள் விவாதிக்க உள்ளனா்.

உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, ஆரோக்கியம், எண்ம மாற்றம் (டிஜிட்டல் மாற்றம்) ஆகிய தலைப்புகளில் 3 அமா்வுகள் நடைபெறுகின்றன. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக பிற நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையை மேற்கொள்வாா். மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை முறைப்படி பிரதமா் மோடியிடம் வழங்குவாா். பாலியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

வரும் டிசம்பா் 1-ஆம் தேதிமுதல் ஜி20-யின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஜி20-க்கு இந்தியா தலைமை ஏற்பதைக் குறிக்கும் வகையில், அதற்கான இலச்சினை, கருத்துருவை வெளியிட்ட பிரதமா் மோடி, இணையதள பக்கத்தையும் தொடக்கி வைத்தாா். உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 85 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஜி20 அமைப்பு, உலக வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையை ஜி20 நாடுகள் கொண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.