சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12வது மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு ...

கோவை: தகவல் தொழில்நுட்ப துறையில் சிப் தேவைகளுக்கு சீனா, தைவானை தேடுகின்றனர் எனவே சிப் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் சார்ந்த 33 தொழில் அமைப்புகளுடன் முதலமைச்ச் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டத்தில் தொழில்துறையில் ...

கோவையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்பட வசனத்தை திமுகவினரும், மக்கள் நீதி மய்யத்தினரும் போஸ்ட்டராக அடித்து ஓட்டியிருப்பது சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட் ” திரைப்படம் மே 7 ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர… மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் ...

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட மாநில காங்கிரஸ் ...

புதுச்சேரி: புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்த மாற்றுக்கட்சியினரை அதிகளவில் இழுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாம். இதனால், பாஜகவினரும் தி.மு.க, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சியினருடன் மட்டுமல்லாமல், அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் கட்சியில் சேர மறைமுகமாக பேசி வருவதாக ...

டெல்லி: மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி தொழில்நுட்பம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும் என்றும் 10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க ...

சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக ...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீது செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் ...

கோவை மாநகரில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகம் செய்யும் ஏற்பாடாக எரிவாயு இருப்பு வைக்கும் ‘சிட்டி கேஸ் ஸ்டேஷன்’ கட்டுமானப்பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய ...