கோவை மாநகரில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகம் செய்யும் ஏற்பாடாக எரிவாயு இருப்பு வைக்கும் ‘சிட்டி கேஸ் ஸ்டேஷன்’ கட்டுமானப்பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த பணியை மேற்கொள்கிறது இதற்காக கோவை மாவட்டத்தில் 230 கிலோ மீட்டருக்கு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது, இதுவரை 65 கிலோ மீட்டருக்கு பணி முடிவடைந்துள்ளது இந்த ஆண்டு இறுதிக்குள் குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகிக்கும் திட்டம் துவங்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவற்றை தவிர்த்து மாவட்டத்தின் வாகன எரிவாயு விநியோகிப்பதற்கு 273 சி.என்.ஜி ஸ்டேஷன் கிளை திறக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுவரை 10 ஸ்டேஷன்கள் துவங்கப்பட்டுள்ளன இருப்பு மையம் திறப்பு இவை அனைத்துக்குமான இயற்கை எரிவாயு இருப்பு வைக்கும் மையமான ‘கோவை சிட்டி ஸ்டேஷன்’ மற்றும் ‘மதர் ஸ்டேஷன்’ அதன் கோவை பிச்சனூரில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்கு கொச்சி முனையத்தில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது பிச்சனூரில் அமைந்துள்ள ‘சிட்டி ஸ்டேஷன்’ இயற்கை எரிவாயு இருப்பு மையத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் நானாவேர் திறந்து வைத்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு இந்த ஈர்ப்பு மையம் உதவும் அடுத்த ஆண்டுக்குள் கோவையில் 41 இயற்கை எரிவாயு விநியோக மையங்கள் தொடங்கப்படும் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு பரவலாக கிடைக்கும் விலையை மேலும் குறைக்க கூடுதலாக ஆன்லைன் சி.என்.ஜி ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வினியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கேஸ் விலை குறையும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். கோவையில் தற்போது எரிவாயு இருப்பு மையம் சிண்டிகேட் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ள நிலையில் இயற்கை எரிவாயு விலை ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகின்றார்.
Leave a Reply