ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு ...
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது… எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று ...
20ம் நூற்றாண்டில் உலகில் உள்ள பிற மக்களுக்கு கிடைத்த அடிப்படை வசதிகள் கூட, குஜராத்,இமாச்சலப்பிரதேச மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட முன்பு இருந்த அரசு வழங்கவில்லை என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறையும் பாஜக ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக ...
நமது அரசு 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. எல்லா வீடுகளுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கியுள்ளோம் – என இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பெருமிதம். இந்தியாவில் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று இமாச்சல பிரதேசத்தில் ...
சென்னை : பாஜக நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழகம் திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். முன்னதாக, பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளரை தாக்க முயன்ற சம்பவம் ...
முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் ...
திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின், பொதுக்குழு கூட்டத்தில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். அதில், “மழை பெய்தாலும் என்னை தான் திட்டுகிறார்கள், மழை பெய்யவில்லை என்றாலும் என்னை தான் திட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன், இன்று கட்சிக்காரர்கள் என்ன பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே எழுந்திருக்க ...
கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய ...
கோவை குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அவர் தலைமை பண்பு குறித்து மாணவர்களிடம் பேசினார். சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. அதே போன்று தான் காலை உணவு திட்டத்தையும் இந்திய ...
கோவை: மத்திய அரசின் அரசு பணியாளர்கள் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாது அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் ...