வரும் 7 ம் தேதி பாஜக சார்பில் போராட்டம்- அண்ணாமலை கோவை வருகை..!

ன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணையை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீளுமிந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பில், அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி திமுக அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

கடந்த 28.11.2022-ம் தேதியில் நடைபெற்ற விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவற்றப்பட்டு 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு அன்னூர் தயாராகும் வேளையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

எனவே ஒரு இன்ச் விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடியாது. டிசம்பர் 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு அன்னூரில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை தெரிவிக்கவுள்ளார்கள்.

இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் கரியாம்பாளைம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 10,000-த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

அரசு ஆணை ரத்து செய்யும் வரை பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்துவதெனவும், விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் இச்செயல்பாட்டை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் கொண்டுசென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் அன்னூர் வடக்கு தெற்கு ஒன்றிய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.