கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் ...

ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ...

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் ...

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை ...

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றதிலிருந்து நடைபெற்ற 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் முழுமையாக திமுகவுக்கு சென்று விட்டன. இதுவே அதிமுக தோல்வியடைய காரணம் என சி.வி சண்முகம் உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக பேசினார். அதே போன்று ...

ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ...

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பெரும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். விலைவாசி உயர்வு, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி ...

எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என டிடிவி தினகரன் உரை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது; ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது. ...

ஜெயலலிதாவை போல் கருணாநிதியைப் போல் ஆளுமை மிக்க தலைவராக நானும் இருப்பேன் நானும் தலைவன் என்று மார்தட்டிய அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவை மாதிரி ஒரு நபர் உலகத்தில் யாரும் இல்லை. ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததால் , என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள் ...

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை (டிஏ) உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இது தொடர்பாக பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு ஏற்கெனவே 105 சதவீத டிஏ வழங்கி வருகிறது. இதற்கு மேல் மாநில ...