பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு ...

தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ...

வாக்களிப்பது வயது வந்த அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை. ஆனால் பலர் வீட்டை விட்டு வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், தற்போது வீட்டை விட்டு வெளியில் வசிப்பவர்களும் வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு புதிய தீர்வைக் கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் உள்நாட்டு வெளிநாட்டு வாக்காளர்களுக்காக ரிமோட் ...

புதுவை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்க முடிவு செய்துள்ளோம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், ...

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் ...

ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி8 பேர் பரிதாபமாக ...

1000 ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடம் இருந்து அரசிடம் கோரிக்கைகள் எழுந்தது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (டிச. 28) ஆலோசனை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஏற்கெனவே ...

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் மூர்த்தி என்பவர் வீட்டில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உணவருந்தினர். ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரகாரத்தை பிரவீன் பாரதி பவார் கூறியதாவது, ‘தமிழகத்தில் மகப்பேறு பிரசுரத்தில் சாய்சிய இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இது பாராட்டுக்குரியது’ என்றார். மேலும் பேசிய அவர், ...

சென்னை: ஆதார் அட்டையை போல, தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட ‘மக்கள் ஐ.டி’யை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார், மொபைல் சிம், வங்கி பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் பலன்களுக்கு ...