பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதம்.. போர்க்களமாக மாறிய பாஜக அலுவலகம்-சென்னையில் பரபர..!

மிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமான அண்ணாமலை தன் மீதான புகாருக்கு மௌனம் மட்டுமே பதில் என்று கூறினார். இந்நிலையில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஒரு கட்டத்தில் அண்ணாமலை நிதானத்தை இழந்து பத்திரிக்கையாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதோடு ஒரு கட்டத்தில் youtube சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது என்றும் அண்ணாமலை கேட்டார். அதோடு முடிந்தால் என்னை புறக்கணித்துவிட்டு செல்லுங்கள், என் பேட்டியை போட சொல்லி காலில் விழுந்து கெஞ்ச மாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக அலுவலகமே போர்க்களமாக மாறியது. இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு நிதானமற்ற போக்கு கட்சியின் தலைவருக்கு அழகல்ல என்றும், ஊடகங்களுடன் நாகரீக உறவை பேண அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.