துபாயில் ஓட்டலில் நடந்தது என்ன..? லீக் ஆகும் ரகசியம்.. காயத்ரி ரகுராம் மீது புகார் .!!

மிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த நில நாட்களாக காயத்ரி துபாயில் சிலரை சந்தித்தார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

துபாயில் காயத்ரி என்ன செய்தார், யாரை சந்தித்தார் என்ற மர்மம் நீடித்த நிலையில் அதற்கான முழு விபரம் வெளியாகியுள்ளது.

துபாயில் IPF தமிழ்நாடு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் ரவிச்சந்திரன். தமிழகத்தை சேர்ந்த இவர், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று துபாய் பாஜக IPF ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக வெளிநாடு வாழ் தமிழர் நலன் மாநில தலைவர் காய்த்ரி ரகுராம் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் பதவி ஏற்கும் நாளுக்கு முன்கூடியே 11.10.22 அன்று துபாய் வந்துள்ளார். காயத்ரியை தொடர்பு கொண்டு ரவிச்சந்திரன் கேட்ட போது, தனிப்பட்ட வேலையாக வந்துள்ளேன், நண்பர் ரூம்மில் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சசிக்குமார் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகயி பாஜக நிர்வாகி இருவரும் காயத்ரியுடன் துபாய் சென்றுள்ளார்கள்,

துபாய் வந்த மறுநாள் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு 8 நாட்கள் தங்க இருக்கும் ஓட்டம் பில் சுமார். 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கட்ட கூறியுள்ளது காயத்ரி தரப்பு. ஆனால் ரவிச்சந்திரன் மறுத்துள்ளார்.

உடனே கோப்பட்ட காயத்ரி, அசிங்கமான வார்த்தைகளால் ரவிச்சந்திரனை திட்டி, உடனே ஒருவரை வரவைத்து துபாயின் IPF ஒருங்கிணைப்பாளர் பதவி வேறு ஒருவருக்கு கொடுக்க வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் வேறு யாரும் முன்வரவில்லை,. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்தை ஆய்வு செய்ய சென்றார். அப்போது இந்த இடம் ஆடம்பரமாக இல்லை, எனது பெயருக்கு இது கலங்கம் விளைவிக்கும் செயல்.

இதுவே அண்ணாமலை என்றால் இப்படித்தான் செய்வாயா? எங்களுக்கெல்லாம் செய்ய மாட்டியா? என ரவிச்சந்திரனிடம் கோபத்தை கொட்டியுள்ளார் காயத்ரி.

ஆனால் 16.10.22 அன்று நடந்த நிகழ்ச்சியில் தன்னை பற்றி பெருமையாக பேசிவிட்டு அவசர மாக வேறு நிகழ்ச்சிக்கு காயத்ரி சென்று விட்டார்.

இந்த தகவல் அண்ணாமலை கவனத்துக்கு சென்றுள்ளது.மேலும் அழைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கவனம் செலுத்தாமல், கேளிக்கை கொண்டாட்டம் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்திப்புகளில் மட்டுமே துபாயில் கவனம் செலுத்தி வந்துள்ளார் என கூறப்படுகிறது.

துபாயில் காயத்ரி என்னெல்லாம் செய்தாரோ, அது அண்ணாமலை கவனத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து ரவிச்சந்திரன் அண்ணாமலைக்கு புகாராக தெரிவித்துள்ளார். உடனே நடவடிக்கை எடுக்க அந்த புகாரில் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தமிழகத்தில் இருவருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது, அதுவே காயத்ரி ரகுராமுக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.