2500 கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வங்கி வரைவோலை – முதல்வர் வழங்கினார்..!

திதிராவிடர் மக்கள் வாழும் பகுதியில் உள்ள கோயில்கள், கிராமப்புற கோயில்கள் திருப்பணி திட்டத்தின் கீழ் 2500 கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வங்கி வரைவோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் .

2021-2022-ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிபின் போது இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கிராமப்புறத் திருக்கோயில்கள் திருப்பணி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1250 திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள திருக்கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் 1250 திருக்கோயில்கள் இறுதி செய்யப்பட்டு மொத்தம் 2500 திருக்கோயில்களுக்கு வரைவோலை வழங்கப்பட உள்ளது.

2500 இத்திருப்பணித் திட்டத்தின் கீழ் இறுதி செய்யப்பட்ட திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளும் பொருட்டு வரைவோலை வழங்கும் விழா தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையில் எதிர் வரும் 05.01.2023 அன்று சென்னை, வில்லிவாக்கம், திருவள்ளூர் நெடுஞ்சாலை, சிவசக்தி காலனி, அருள்மிகு அகத்தீஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளுக்கு கீழ்கண்ட விவரப்படி சிறப்புப் பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.