கொச்சி: கேரளாவுக்கு பிரதமர் மோடி இன்று (24.04.2023) வருகிறார். கொலை மிரட்டல் எதிரொலியால் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (24.04.2023) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் ரோடுஷோவில் சென்று ...

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ போலியானது என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்த ஆடியோ ...

வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்திக்கிறார். டெல்லியில் வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இடையே குழப்பம் நிலவும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம், ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தார் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் ஒரேஆண்டில் ரூ.30,000 கோடி வரைமுறைகேடாக சம்பாதித்துள்ளார்கள் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ...

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது என அதிமுக காவல் நிலையத்தில் புகார். திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் மாநாடு நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டை நடத்த அனுமதிக்க கூடாது என அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி ...

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை என முதலமைச்சர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவருக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் சம்பவம் முதல் பொள்ளாச்சி, கோடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ...

சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இரண்டாவது நாளாக இன்று இறுதி ...

கர்நாடக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதன்படி, புலிகேசி நகருக்கு கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசனை களமிறக்கி விட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. அதேபோல, பன்னீரும் தனது தரப்பில் புலிகேசி நகர் தொகுதிக்கு எம்.நெடுஞ்செழியன், கோலார் தங்கவயல் தொகுதிக்கு அனந்தராஜ், காந்தி நகர் தொகுதிக்கு கே.குமார் என்பவரை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், கர்நாடகத் ...

பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்… இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 ...

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா, இவைகள் எல்லாம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தந்தார். நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேர வேலை மசோதாவுக்கு ...