சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து – பாஜகவினர் மீது திமுக புகார்..!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பொதுக் கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் குறித்து பரபரப்பாக பேசி வருகிறார். இதனிடையே திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையில் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பதிவிட்டு வருவதாகவும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் குறித்து சமூகவளை தளங்களில் அவதூறு பரப்பி வரும் பாஜகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், திமுக தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூத்தியிடம் புகார் மனு அளித்தனர்..