தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு ...
எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக திருச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை நடத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று திருச்சியில் பிரமாண்ட ...
திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...
மதுரை: ”லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் தான் பேசுவோம்,” என, மதுரை விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியதாவது: ‘தமிழக முதல்வரின் மகன் அமைச்சர் உதயநிதி, மருமகன் சபரீசன் ஓராண்டில், 30 ஆயிரம் ...
திருச்சியில் நடைபெறும் மும்பெரும் விழாவிற்கான மாநாட்டு மேடையானது சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில்,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – அதிமுக 51 வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக பொன்மலை ...
இந்தியாவைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று உரையாற்றியுள்ளார்… இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் ந.நல்லசேதுபதி இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேடையில் உரையாற்றும் போது, 1967-க்கு ...
சென்னை: ‘மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி ...
திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ...
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை ...
உலக ஆட்டிசம் (மனம் இருக்க நோய்) மாதத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளின் குறை தீர்ப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர் எப் நிறுவனத்தால் ...













