சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களால், தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்து கொள்ளும் அதிகாரம் பெற்ற சுயசார்பு அமைப்பாகும். அதில் ஆளும் கட்சியோ, ...

நாட்டில் உள்ள டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், அதை ஒருவரையரைக்குள் கொண்டுவரவும் விரைவில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மகாநகர் டைம்ஸ் என்ற நாளேடு சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் ...

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டும் அவர் மீது ...

தமிழ்நாடு, கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. பெங்களூருவில் இருந்து கர்நாடக – தமிழ்நாடு எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது. இந்நிலையில், பொம்மசந்திரா முதல் ஓசூர் ...

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொந்தளித்துள்ளார். கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்த என் ஆசையில் நிறைய மண்ணை அள்ளி போட்டுவிட்டதாக கூறி அவர் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சாடி உள்ளார். சென்னை ...

புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது :- தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசு அதிகாரிகள் அவருக்கு ...

புதுச்சேரி : திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி புதுச்சேரி திமுகவினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் திமுக தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் மணவெளி தொகுதி பொறுப்பாளர் சன் ...

நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தாா். பின்னா் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது- தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இது மொத்த ...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின்போட்டியிட்டு 69, 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது ...

சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் , எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர். பாஜகவின் ...