ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை -ஜி.கே.வாசன் அதிரடி அறிவிப்பு..!

ரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.