ஒரு திருமண நிகழ்வில் சசிகலாவும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் சந்தித்துக் கொண்டது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர். அதிமுக விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் ...

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ – ஜியோவின் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ இன்று சென்னையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை ...

ஜெயக்குமாரை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நேற்று ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஜேடிசி பிரபாகர், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதால் ராயப்பேட்டை பகுதியில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்து இருந்த நிலையில், இன்று அதே கோரிக்கையை ...

பிரதமர் நரேந்திர மோடி   காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் . இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, ...

உலகின் முன்னணி நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund) அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், உலக பொருளாதார நிலவரம் மற்றும் சர்வதேச அரசியல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்து விவாதித்தனர். ...

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி – நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 7 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை ...

இன்றைக்கு அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டு உள்ளது என திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு. மதுரை பாண்டிகோயிலில் நடைபெற்ற வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக அரசு மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் ...

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு  அடுத்த மாதம் அக்டோபர் முதல் அமலாக்கிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு சார்ஜ் பாயிண்ட் அமைப்பதற்கான ...

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ...

சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட போது காணாமல் போனதாக சொல்லப்பட்ட வெள்ளி வேல் அங்கேயே இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடியது. இந்த கூட்டம் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அதே நேரம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால ...