பாகிஸ்தான் தேவாலயங்கள் மீது தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்..!

வாஷிங்டன்: பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை கவலை அளிக்கிறது எனவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜரன்வாலா மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது. இதற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது: அமெரிக்கா வன்முறை அல்லது மதரீதியாக அச்சுறுத்தல்களைப் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.அமைதியான கருத்து சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும். நாங்கள் முன்பு கூறியது போல், மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை கவலை அளிக்கிறது. என்றார்.இதற்கிடையில், தாக்குதலின் போது போலீசார் அமைதியாக இருந்ததாக, கிறிஸ்தவ தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.