இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பணிகள் நடைப்பெற்று வருவதால், இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ...

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 150வது சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடைபயணத்தை மேற்கொண்டார். ஜிஆர்டி சதுக்கத்திலிருந்து, பாகலூர் சாலை, ராமர் கோவில் சாலை வழியாக பழைய பெங்களூர் சாலை ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை இதைத் தொடர்ந்து ராம் நகர், ...

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கும் நிலையில், தி.மு.க. சார்பிலும் மாணவரணியைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்கு, ‘புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுகவின் மாணவர் அணியினர் ...

அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ...

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்கின்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பாஜக அரசு செய்த சாதனைகளையும் விளக்கி வருகிறார். அதன்படி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் இரண்டு நாட்கள் முன்பு ...

சென்னை: சமூக ஊடகங்களில் திராவிடத்துக்கு எதிரான கருத்துகளை சங்கிகள் தொடர்ந்து பரப்புகிறார்கள் என்றும், அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை திமுக அயலக அணிக்கு உள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக அயலக அணியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. ...

ராமர் கோவில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சமாஜ்வாதி ஜனதா கட்சியும் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதிலும் இருந்து பல அரசியல் பிரமுகர்கள் திறப்பு விழாவில் பங்கேற்க ...

தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கிருஷ்ணகிரி: பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபயணம் மேற்கொண்டார். ...