ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய கருத்து என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்களின் வரிப்பணத்தை அரசியல் ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில், இதில், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது ரத்த வெள்ளத்தின் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் இந்த ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்.. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ...

சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ...

புதுடில்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர்.தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் கட்சியின், 9,915 பிரதிநிதிகளில், 9,500க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தனர். நாடு முழுதும், ...

சென்னை: சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் ...

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை ...

சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய வீரபெருமாள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி ஆகியோர் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். ...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் ...

சென்னை: மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர்.. தலைமை செயலகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்திய தூதர்கள் 10 பேர் கொண்ட குழுவாக நேற்று சென்னை வந்திருந்தனர்.. அவர்கள் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து, அரசு விவகாரங்கள் குறித்து பேசினர். பின்னர் ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். ஆகையால் காங்கிரஸில் தலைவர் ...