சென்னை: வட இந்தியாவில் நெல்லிக்காய் மூட்டைபோல இண்டியா கூட்டணி சிதறி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் ...

பிரதமர் மோடி கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட தக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது. ...

சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ...

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்வு நடைப்பெற்றது. ...

கோவை கணபதி, நேரு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 50)இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரகலா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் ...

திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் ...

வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க உள்ளார். நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் தன்னம்பிக்கை இந்தியா வேலை வாய்ப்புத் திட்டத்தை (ABRY) இந்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தத் திட்டம் மார்ச் 2024க்குள் முடிவடையும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ...

ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ...

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் ...

கோவை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகளுக்கான தடை நீங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006-ம் ஆண்டு ரேக்ளா போட்டிகளுக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிரண்டி விளையாட்டு என்றார். ...