கடனைத் திரும்பி கேட்டதற்கு குப்பை கொட்டி டார்ச்சர்.. கோவை மேயர் குடும்பம் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார்..
மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் வீடு மீது குப்பையை கொட்டி டார்ச்சர் செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் பற்றி வீடியோ ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு புகார்…
கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திர கார்டனில் வசிப்பவர் சரண்யா. இவரது கணவர் கோபிநாத் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தி.மு.க வைச் சேர்ந்த இவர்கள் பத்தாண்டுகளாக கோவையில் வசிக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளாக தற்பொழுது உள்ள வீட்டில் வாடகைக்கு வசிக்கின்றனர். நான்கு வீடுகளை உள்ளடக்கிய இந்த வீட்டில் முன்புற வீட்டில் கோபிநாத் குடும்பம் வசிக்கின்றது. பின் வீட்டில் கோவை மேயர் கல்பனாவின் தாய் காளியம்மாள் மற்றும் மேயரின் தம்பி குமார் வசிக்கின்றனர். கல்பனா மேயர் ஆவதற்கு முன் காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவுக்காக கோபிநாத்திடம், குமார் 15,000 ரூபாய் வாங்கி உள்ளார். அதில் 5,000 ரூபாய் மட்டும் திரும்பிக் கொடுத்ததாகவும், பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதற்கு முன் அவரது அக்கா கல்பனா கோவை மேயராகி விட்டார். கொடுத்த பணத்தை குமாரிடம் கோபிநாத் கேட்ட போது திட்டி அனுப்பி உள்ளாராம் குமார். பலமுறை கேட்டும் பணம் கிடைக்காத விரக்தியில் கோபிநாத் அதை கேட்காமலே விட்டு விட்டார்.
ஆனால் அதன் பின்பு பல விதங்களிலும் குமார் டார்ச்சர் செய்ய துவங்கினார். எல்லோருக்கும் பொதுவான இரண்டு கேட்டுக்களை பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளார். இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக கோபிநாத் அவரது காரை எடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் மேயர் கல்பனாவுக்கு அங்கு குடும்பத்துடன் குடியேறி உள்ளார். அதன் பின் கோபிநாத் குடும்பத்தின் மீதான டார்ச்சர் அதிகரித்து உள்ளது. கோபிநாத் வீட்டின் சமையலறை பின்புறத்தில் கெட்டுப்போன சாப்பாடு, வெட்டப்பட்ட கோழிக் கழிவு போன்றவற்றை கொட்டி உள்ளனர். வாலியில் சிறுநீரை பிடித்து அதையும் கோபிநாத் வீட்டின் சமையலறை சுவற்றின் மீது குமார் கொட்டி உள்ளார். இவை அனைத்தையும் சி.சி.டி.வி பொறுத்து கோபிநாத் குடும்பத்தினர் வீடியோ எடுத்து உள்ளனர். இது பற்றி தமிழக முதல்வர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் கோபிநாத் குடும்பத்தினர் புகாராக அனுப்பி உள்ளனர்.
Leave a Reply