சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாஜக திட்டம்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ...

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. நேற்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.. இந்த கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டபோதே, 2 விதமான எதிர்பார்ப்புகள் எழுந்தன. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து ...

சென்னை: பொது சிவில் சட்டம் கொண்டு வரும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மக்களவையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன், சமத்துவம், ...

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டனர். அன்று இரவே அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால், நெஞ்சு வலி ...

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் நீங்கள், உங்கள் அண்ணன், தம்பி, சகோதரர்கள் ஆகியோர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா தெரிவித்துள்ளார். சென்னை தங்க சாலையில் உள்ள கொண்டித் தோப்பு பகுதியில் பிரதமர் மோடியின் ஒன்பது ...

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் இணைவதாக இருந்தால் மன்னிப்பு ...

தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தலை வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ...

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைக் கட்சியிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டேயிடம் பறிகொடுத்திருக்கிறார். தேர்தல் கமிஷன் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுமீது வரும் 31-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்திருக்கிறது. தற்போது ...

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு ...

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முக்கியமான சில வாதங்களை வைத்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ...