சென்னை: 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தற்போது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை பாஜக, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என ...
சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என தற்போதைய மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், ...
வாஷிங்டன்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை ...
மக்களவை தேர்தலுக்கு முன்பும் தேர்தல் சமயத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட் பாஜக தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய ...
பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ...
சென்னை: கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள், தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க 6 மாதம் அவகாசம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், 44 கோரிக்கைகளை ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.450 வீதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மானிய விலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மானிய தொகையைப் ...
தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுகூட்டம் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு வருகை தந்த சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது ...
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 5,000 கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கர்நாடக மாநிலம், மாண்டியா விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி ஆதரவில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ. புட்டண்ணா தலைமையில் விவசாயிகள் ...
எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று ...













