வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ரூ.450-க்கு வழங்க அரசு முடிவு..!

த்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.450 வீதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மானிய விலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மானிய தொகையைப் உடனடியாக பெறுவார்கள், மற்ற பயனாளிகள் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு தொகையை பெறுவார்கள்.

மாநில அரசு ரூ.450 வீதத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் வழங்க அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை நேரடி பயன் பரிமாற்றம் மூலம் மாற்றப்படும். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்குத் தொகை உடனடியாக மாற்றப்படும், மீதமுள்ளவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அதைப் பெறுவார்கள், “என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் முன்பு மத்திய அரசு அனைத்து எல்பிஜி நுகர்வோருக்கும் அதாவது 33 கோடி இணைப்புகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளித்தது. அதே போல பிரதமரின் உஜ்வாலாத் திட்ட நுகர்வோர் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியத்தை தங்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பெறுவார்கள் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.