தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி..!

தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுகூட்டம் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு வருகை தந்த சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து ஐயா உங்களுக்கு என்ன கேள்வி வேணுமோ கேளுங்க என கையெடுத்து கும்பிட்டு தனது உரையை தொடங்கினார். அப்போது தமிழகத்தில் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வேண்டாம் எனவும் கர்நாடகாவில் உரிமைத்தொகை 2000 வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர் அதற்கு
சீமான் இந்த கொடுமைக்கு நான் எங்கே போய் முட்டிக் கொள்வது காங்கிரசும் திமுகவும் அரை நூற்றாண்டு காலமாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர் ஆனால் உரிமைத்தொகை ஆயிரம் கொடுப்பதற்கு நிதி எங்கிருந்து வந்தது  தமிழக அரசு கடன் வாங்குகிறது அந்த கடன் சுமை யார் மீது சுமத்தப்படுகிறது மக்களிடம் சுமத்தப்பட்டு மக்களுடைய காசை மக்களுக்கே உரிமை தொகை கொடுத்து கடன் வாங்கி மக்களை கடனாளியாக்குகிறது.
 இந்த அரசு தமிழ்நாட்டு மக்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் பயனாளிகள். நுகர்வோர் வாக்காளர்கள் பிச்சைக்காரர்கள் என ஆக்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் அரசின் கோட்பாடு  நலத்திட்டம் சலுகைகள் போனஸ் மானியம் இலவசம் என எங்களை மாற்றி வைத்துள்ளீர்கள். அரசியல் கட்டமைப்பு என்பது சாதி,மதம்,சாராயம், பணம், சாப்பாடு, என கட்டமைத்து வைத்துள்ளார்கள் தற்போது 2000 கொடுக்கும் அரசு அடுத்த தேர்தலில் 4000 கொடுக்குமா? இவ்வாறு பொதுமக்களுக்கு மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் எங்களுடைய வறுமை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.
 இந்த நிலையில், பொங்கலுக்கு அரிசி, வெள்ளம், கரும்பு, சர்க்கரை தேர்தல் நேரத்தில் மிக்சி கிரைண்டர் மின்விசிறி தொலைக்காட்சி பேட்டி  இவற்றை வாங்குவதற்கு கூட முடியாத சூழ்நிலை யார் ஏற்படுத்தியது.யார் மக்களை வறுமையில் வைத்துக் கொண்டு இலவசங்களை வழங்குவது ஏற்புடையதல்ல தமிழகத்தில் தற்போது 8 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனை முறையாக பயன்படுத்தி இருந்தால் நல்ல தொழில்களை உருவாக்கி இருக்க முடியும் மக்களுக்கு வருமானம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க முடியும் ஆனால் ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்வதில்லை கடன் பெற்றுக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் வாங்குவது ஒப்பந்தம் அடிப்படை நிலக்கரி வாங்குவது என ஒப்பந்த அடிப்படையில் கமிஷனுக்காக நாட்களை கடத்திச் சென்று கொண்டுள்ளனர். தேர்தல் வரும்போது சிலிண்டர் விலையை குறைக்கிறார்கள் மக்கள் சிலிண்டர் விலையால் பாதிக்கப்பட்ட போது நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் சிலிண்டர் விலையை குறைக்கவில்லை இதில் யார் உள்நோக்கம் உடையவர்கள். மறுபடியும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால் 200 ரூபாய் சிலிண்டருக்கு குறைத்தது நாளை 2000 ரூபாய் விலையை உயர்த்துவார்கள்  மூன்று லட்சம் கிலோ மீட்டர் தாண்டி சந்திராயன் 3 ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஆனால் அருகில் உள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமரால் வர முடியவில்லை
தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக பெற்றோர்கள் குறை கூறுகிறார்கள்
காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு அதிகாரி ஒரு நாள் மட்டும் நேரில் செல்வார் அங்கு ஒரு நாள் ஆய்வு செய்து விட்டு நன்றாக உள்ளது என தெரிவித்து விடுவார், அடுத்த நாள் அதிகாரி உணவை ஆய்வு செய்வதில்லை அப்போது தரம் குறைந்த உணவுகளையும் ஆறிப்போன உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க நேரிடும்.
 ஆதிகால முதல் தற்போது வரை வீட்டிலிருந்து கிளம்பும் பொழுதே மாணவ மாணவிகள் காலை உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
 காலை உணவு திட்டம் என்பது பெயரளவில் அரசியல் செய்வதற்காக திட்டமாக இருக்கிறது.தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் நோய்க்கு ஏற்றவாறு மருந்து இருப்பதில்லை மேலும் அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் இருப்பதால் பல நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக வரும்பொழுது எப்படி அனைவருக்கும் ஒரு மருத்துவர் மருத்துவம் பார்க்க முடியும். பெயரளவுக்கு அமைச்சர்கள் மருத்துவமனைகளை ஆய்வு செய்கின்றனர் அப்போது உள்ள குறைகளை மட்டும் கேட்டு
நடவடிக்கை எடுத்துச் சென்று விடுகின்றனர் அங்கு என்னென்ன குறைகள் இருக்கிறது என ஆய்வு செய்வதில்லை.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் பார்த்தார்கள் என கேட்டால் அமைச்சர் கே என் நேரு கோபித்துக் கொள்கிறார். அவர்தான் இறந்து விட்டாரே அப்படி என்றால் தனியார் மருத்துவமனையே சிறப்பாக செயல்படுகிறது தமிழக அரசின் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படவில்லை என கருதி அரசு மருத்துவமனைகளை மூடி விடலாமா? என கேள்வி எழுப்பினார். மேலும் தனியார் பள்ளிக்கூடங்களில் சிறந்த கல்வி கிடைக்கிறது என்றால் எதற்கு அரசு பள்ளிக்கூடங்கள் செயல்படுகிறது. நமது நாட்டைப் போன்று குழப்பமான நாடு எதுவுமில்லை மத்திய உளவுத்துறை சிபிஐ என்று உள்ளது அதற்கு அடுத்து என்.ஐ.ஏ என்று உள்ளது சிபிஐ சரியில்லை என்றால் என்.ஐ.ஏ வை கொண்டு வரலாம் அல்லவா இவருக்கு ஒரு சம்பளம் அவருக்கு ஒரு சம்பளம் எதற்கு அடுத்து வருமான வரித்துறை என்று ஒன்று உள்ளது அடுத்து அமலாக்கத்துறை என்று உள்ளது இந்த இரண்டு துறைகளில் ஏதோ ஒரு துறை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே காவல் படை உழவுப்படை சி பி சி ஐ டி. க்யூ பிரான்ச் என காவல்துறையில் பல்வேறு துறைகள் உள்ளது இத்தனை துறைகள் இருந்த பட்சத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
 இத்தனை  இலாக்காக்களும் முதலமைச்சரின் கீழ் செயல்படுகிறது.
இந்த இலாககள் மக்கள் சரியாக செயல்படவில்லை என தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் கச்சத்தீவை ஆட்சிக்கு வந்தால் மீட்டெடுப்போம் என தெரிவித்தீர்கள் ஆனால் கச்சத்தீவை மீட்டெடுக்கவில்லை மீனவர்களை இலங்கை கடலோர படையினர் கைது செய்து இலங்கை மீனவர்களின் போட் ஏலம் விட்டு இலங்கை அரசு வருமானம் தேடுகிறது சொந்த நாட்டின் படகை பறிக்கும் இலங்கைக்கு ராணுவ பயிற்சி கொடுக்கிறது  இலங்கையில் ஒரே சங்கிலியில் ஆறு மீனவர்களை கட்டி இழுத்துக் கொண்டு சென்றார்கள் அதற்கு தமிழக அரசு என்ன கண்டனம் தெரிவித்தது இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடு என்றால் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் இந்தியா வல்லாதிக்கம் மிக்க நாடாக இருந்திருந்தால் தமிழகம் சிறந்த ஆட்சியாக இருந்திருந்தால் அங்கு இலங்கையில் தமிழர் ஆதிக்கம் நடைபெற்று இருக்க வேண்டும் தமிழகத்தில் 1500 அரசுப் பள்ளிக்கூடங்கள் மிகவும் மோசமான நிலையில் கட்டிடங்கள் உள்ளன ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் பள்ளி கட்டிடங்கள் கட்டுவது கட்ட ப்பட்டு ஓரிரு நாட்களிலேயே உடைந்து விடுகிறது பாலம் கட்டுகிறார்கள் அது சில நாட்களில் விரிசல் விடுகிறது அதற்கு செலபோன் டேப் போட்டு ஒட்டி அதன் மீது பெயிண்ட் அடித்து திறப்பு விழா நடத்துகிறார்கள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறுகிறார் பழைய பள்ளி கட்டிடங்களை அங்கு படித்த பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் கொடையாளர்கள் புனரமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கிறார் நாட்டின் முதன்மையான வளம் மாணவர்களின் கல்வி வளம் ஆனால் பள்ளிக்கூடங்களை கட்டிக் கொடுப்பதில் முனைப்பு காட்டுவதில்லை
 ஆனால் திமுக அரசு 250 கோடியில் நூலகம் திறக்கின்றனர் 80 கோடியில் கலைஞருக்கு சமாதி கட்டுகிறார்கள் 280 கோடிக்கு தொலைநோக்கு மருத்துவமனை கட்டுகிறார்கள் கோட்டம் கட்டுகிறார்கள் சிலை வைக்கிறார்கள் கலைஞருக்கு பேனா வைக்கிறார்கள் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள் இவர் யாருடைய பணம் என கேள்வி எழுப்பினாள் தமிழகத்தில் கட்டப்படும் கட்டி முடிக்கப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பெயர் மட்டுமே வைக்கப்படுகிறது காமராஜ் கல்விக்கூடங்களை திறந்து வைத்தார் திமுகவினர் மது கூடங்களை திறந்து வைத்தனர் . டாஸ்மார்க் கடைகளுக்கு பொருத்தமான பெயர் வைக்க வேண்டும் என்றால்  கலைஞர் குடிப்பகம் என வைக்கலாம் ஏனென்றால் மதுக்கடைகளை திறந்த வரலாறு  கலைஞர் மட்டுமே!
 ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் இந்திய அரசியலை எதிர்நோக்கி செல்கிறார் அப்படி தமிழர் ஒருவர் இந்தியாவை ஆண்டால் அது வரவேற்கத்தக்கது. அதேபோன்று திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் செம்மண் கிரவல் மண் கொள்ளை நடைபெறுகிறது அதற்காக நாம் தமிழர் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வருவோம் மண்வளங்களை இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பவர் மீது நடவடிக்கை எடுப்போம் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டியிடும் என  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தெரிவித்தார்.