தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை.. வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும், சேதங்களை தவிர்ப்பதும் அவசியம். பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் தமிழகமெங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் ...
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தோ, பாஜக பற்றியோ அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். பாஜக உடன் கூட்டணி முறிந்து விட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில் பொதுவெளியில் எதைப்பற்றியும் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு ...
கர்நாடக அரசு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு தண்ணீர் தர கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. கடந்த 12ம் தேதி ...
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது, “தி.மு.க. நிறுவனத் தலைவரும் மறைந்த முதல் அமைச்சருமான பேரறிஞர் சி.என். அண்ணாத்துரை குறித்து பேசினார். அப்போது, சி.என். அண்ணாத்துரையின் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் கண்டித்தார் எனப் ...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புக் கூட்டத் தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ...
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ...
கடந்த செப்டம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 1.6 கோடி பேர் ...
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துக்குகுடாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சோனியா காந்தியை பாரத மாதா போலச் சித்தரித்து கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பிற தலைவர்களின் கட்அவுட்களுடன் சோனியா காந்தியை ...
தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ...
பிரதமர் நரேந்திர மோடி தனது படாடோப திட்டங்களில் ஒன்றாக ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை ஞாயிறன்று துவக்கி வைத்திருக்கிறார். இளைஞர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்காக ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இத்திட்ட த்தில் இணைபவர்களுக்கு தொழில்சார்ந்த கரு விகளை வாங்க முதல் தவணையாக ரூ.1லட்சம் வரை ...













