ஊர்கள் தோறும் தி.மு.க .100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுக வின் சார்பாக பெரிய கடை வீதி _ தைலா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,பள்ளி கல்வி துறை அமைச்சருமான மாண்புமிகு அன்பில் ...
சென்னையில் உள்ள கிண்டி வா்த்தக மையத்தில் ‘மருத்துவத்தின் எதிா்காலம்’ என்ற கருப்பொருளில் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ மாநாட்டை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது. இந்நிலையில் அந்த மாநாட்டு முன்னேற்பாட்டு ...
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார். பெங்களூரில் இருந்து மாலை 4:50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ.என்.எஸ் அடையாறு செல்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் அவர், கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்கிறார். ...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைக்கு தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க அதிமுகவில் விதி ஏதும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இடைக்காலத் தடை விதித்தால் உங்கள் ...
திருச்சி மாநகர மாவட்ட மாணவரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சிந்தாமணி இப்ராம்ஷா அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். கட்சிப் பணியினை திறம்பட செய்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆலோசனைகளை வழங்கினார். தன்னை மாநகர மாவட்ட மாணவரணி செயலாளராக ...
நாளை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளைத் துவங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. முன்னதாக நேற்று கேரளத்தில் பிரதமர் மோடி, சுரேஷ்மேனன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்ளும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி ...
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டு முறை மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக ஒவ்வொரு ...
இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பணிகள் நடைப்பெற்று வருவதால், இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 150வது சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடைபயணத்தை மேற்கொண்டார். ஜிஆர்டி சதுக்கத்திலிருந்து, பாகலூர் சாலை, ராமர் கோவில் சாலை வழியாக பழைய பெங்களூர் சாலை ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை இதைத் தொடர்ந்து ராம் நகர், ...













