சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு -ரஷ்ய அரசு அறிவிப்பு!!

விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் சீனாவின் “யூனியன் பே” மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியா தொடுத்ததையடுத்து , உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் பணப் பரிவர்த்தனை சேவைகளை விசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் நிறுத்தியது.

முன்னதாக, அடிடாஸ், போர்ஷ், பே-பல்,நெட்ப்ளிக்ஸ், Intel, Inditex, ஏர் பி.என்.பி, ரோல்ஸ் ராய்ஸ், மைக்ரோசாப்ட், ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் பன்னாட்டு நிதி பரிவர்த்தனையை மேற்கொள்ளும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களுடைய, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள பல்வேறு வங்கிகள் “சீன யூனியன் பே கார்டு” மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

“யூனியன் பே” என்பது 2005ம் ஆண்டு முதல் சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய மிகப்பெரிய பணபரிவர்த்தனை நிறுவனமாகும். இவை சுவிட்சர்லாந்து, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, மெக்சிகோ, சைப்ரஸ், தாய்லாந்து உள்ளிட்ட 180 நாடுகளில் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.