காதல் திருமணம் செய்த அமைச்சர் சேகர்பாபு மகள்: பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீஸில் தஞ்சம்.!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமது அதிரடி நடவடிக்கைகளால் அறநிலையத்துறையில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

இவருடைய மகள் 2 நாட்களுக்கு முன்பு 6 வருடங்களாக காதலித்து வந்த இளைஞர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். இவர் கர்நாடகா பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான நான் ஜெயக்கல்யாணி . நானும் சதீஷும் 6 வருடங்களாக காதலித்து 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம். இருவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த திருமணம் நடந்துள்ளது. 2021 ஆகஸ்ட்டில் வீட்டை விட்டு வெளியேறினோம். 3 நாட்கள் கழித்து எங்களை புனேவில் சிறைபிடித்தனர்

திருவள்ளூரில் 2 மாதம் எனது கணவர் மற்றும் அவரது பெற்றோரை சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். ஆகஸ்ட் 18ல் நாங்கள் மும்பையில் இருந்த போது எனது அப்பா இவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார். இவர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்.

என்னுடைய அப்பா அமைச்சராக இருப்பதால் தமிழக அரசோ அல்லது தமிழகத்தில் உள்ளவர்களோ எங்களுக்கு உதவ தயாராக இல்லை. இதனால் தான் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்துள்ளோம். தொடர்ந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக காவல்துறை உடனடியாக எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.