நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ...

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ...

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது‌. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தின் அருகாமையில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தால் குளம் போல் காட்சியளித்தது. மழைநீர் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் வெள்ளப்பெருக்கு எடுப்பதுபோல் காட்சியளித்ததை பார்வையிட்ட வால்பாறை நகர மன்ற தலைவி அழகு சுந்தர வள்ளி, வட்டாச்சியர் சிவகுமார், நகராட்சி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்காகவும், சுற்றி பார்ப்பதற்காகவும் ஏராளாமனவர்கள் அங்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ...

வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் ஆகஸ்ட 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்ககடல் மற்றும் ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி பேசுகையில் மாவட்டத்தில் சிறு மற்றும் குரு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக திகழ்வதாகவும் இங்கு உள்ள தொழிற்சாலைகளை மென்மேலும் வளர்ப்பதற்கும் புதிய தொழில் நிறுவனங்களை ...

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவு ரயில்கள் சென்று வருகிறது. கோவைக்கு வராத ரயில்கள் கூட போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும். போத்தனூர் ரயில் நிலையத்தில் 5 பிளாட்பாரம் உள்ளது. கோவை அடுத்தபடியாக இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில்வே ...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...

கோவையில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. வரும் நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் லேசான தூரலோடு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் ...