கோவை :தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைபணிபுரிய வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் டாக்டர்களுக்கு மன உளச்சல் ஏற்படுகிறது.இந்த ஆணையைரத்து செய்து பல வருடங்களாக அமுலில் இருந்து வரும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை ...
சென்னை: ஆடியில் மாதத்தில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 41.5 சதவீதம் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ...
ஆவண சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்துவதும், லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை சோதனை செய்வதாக போலீஸார் பணம் வசூல் செய்வதும் வழக்கமான ஒன்று. இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினர் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை ...
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் கேமராக்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு கருதி ...
இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே மாதத்தில் இருந்து காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கனடாவின் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வெளிநாடு சென்று வேலை ...
ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை கணபதி கட்டபொம்மன் வீதியில் ஒரு கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை மாநகர உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், காவல் துறையினர் அங்கு சோதனை நடத்தினா். ...
தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் (வெள்ளை நிற போர்டு) பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளின் நிறத்தை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை ...
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு கி.மீ. கணக்கில் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் தொடக்கத்தில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் ...
தகுதியான ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை ...
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக ...













