சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை..!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கோவை நகரப் பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்..

வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை விட்டு நாடு முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கோவை மாநகர உதவி ஆணையர் ஸ்டீபன் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட போலீசார் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளையும் சோதனை மேற்கொண்டனர். 75-ம் சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் கோவை விமான நிலையம்,ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளபடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சோதனையின்போது,பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுகிறதா என்பது தொடர்பாகவும் சோதனை மேற்கொண்டதோடு ,குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்