2,632 மகளிர் குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி – கோவை கலெக்டர் சமீரன் அறிவிப்பு..!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ மூலம் 2 ஆயிரத்து 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 16 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகராட்சி பகுதிகளில் 504 மகளிர் சுய உதவிக்குழுக்களும், பேரூராட்சி பகுதிகளில் 996 மகளிர் சுய உதவிக்குழுக்களும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 8 ஆயிரத்து 203 மகளிர் சுய உதவிக்குழுக்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 719 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அன்னூர் வட்டாரத்தில் 152 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.76 கோடி கடனுதவியும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 185 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.02 கோடி கடனுதவியும், ஆனைமலை வட்டாரத்தில் 108 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.07 கோடி கடனுதவியும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 104 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.14 கோடி கடனுதவியும், காரமடை வட்டாரத்தில் 194 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14.92 கோடி கடனுதவியும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 72 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.50 கோடி கடனுதவியும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 108 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.21 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 153 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.06 கோடி கடனுதவியும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 84 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.18 கோடி கடனுதவியும், சூலூர் வட்டாரத்தில் 95 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.04 கோடி கடனுதவியும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 107 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.10 கோடி கடனுதவியும், மதுக்கரை வட்டாரத்தில் 51 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.79 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 680 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43.12 கோடி கடனுதவியும், நகராட்சி பகுதிகளில் 199 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.87 கோடி கடனுதவியும், பேரூராட்சி பகுதிகளில் 340 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.53 கோடி கடனுதவி என மொத்தம் கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 2 ஆயிரத்து 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.