கோவை: தமிழகம் முழுவதும் 26 சார் பதிவாளர்கள் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 2022-23 வரை பணிமூப்பு தொடர்பாக திருத்திய பட்டியலை தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டது. இதில் கோவை சிங்காநல்லூர், கிணத்துகடவு,மேட்டுப்பாளையம் உட்பட 26 ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது. சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு ...
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாகவும், இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை காரணமாக கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். இதையடுத்து நேற்று மாலை முதல் காந்திபுரம் ...
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர். முந்தைய கட்டணங்களை விட இரண்டு மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் அரசு ...
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் குப்பம் கிராமத்தில் நேற்று மீன் பிடிப்பதற்காக இந்திரகுமார் 40; மாயகிருஷ்ணன் 55; கர்ணன் 35; கடலுக்கு சென்றுள்ளனர். மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் விடப்பட்டிருந்த வலையில் 35.6 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ் நீர் சிக்கியது. இதை அறிந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு வந்து மீன்வளத்துறை காவல்துறை அச்சிறுப்பாக்கம் ...
பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!! ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் புதிய வைரஸ் பரவுவதாக இந்தியாவின் முன்னணி வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் வைரஸ் எஸ்எம்எஸ் மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பரப்பப்படுவதாக,கனரா வங்கி,பிஎன்பி , எஸ்பிஐ ஆகிய வங்கிகள் ...
டெல்லி : இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று தொடங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ...
உலகிலேயே செல்போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எலக்ட்ரானிக்கல் பிளான்ட் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இதனால் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களை ...
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட திட்டமிடுவார்கள். ...
டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்தார். வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதம் ஆனது. ...













