நடத்தையில் சந்தேகம்: பெண் செவிலியரை கத்திக் குத்திய கணவன் – பட்டப் பகலில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

நடத்தையில் சந்தேகம்: பெண் செவிலியரை கத்திக் குத்திய கணவன் – பட்டப் பகலில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நான்சி நடத்தையில் கணவர் வினோத்க்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த நான்சி, பிற்பகலில் உணவுக்குப் பிறகு பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த கணவர் வினோத்துக்கும், நான்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து நான்சியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் நான்சி துடிதுடித்தார். அருகில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவரை மீட்டு அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவருக்கும் மேற்பட்ட தகராறு கணவர் வினோத் படுகாயம் அடைந்தார். அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.