சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாட்களுக்கு தடை- மாநகர காவல் ஆணையர் உத்தரவு..!

சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு காவல்துறை தடை.

சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 30-ஆம் தேதி (நேற்று) இரவு 11 மணிக்கு தொடங்கி அக்.15-ஆம் தேதி இரவு 11 மணி வரை தடை உத்தரவில் அமலில் இருக்கும் என சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெரிவித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் விசிக்காவின் மனித சங்கிலி அறிவிப்பு போன்றவற்றால் தமிழ்நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழகஅரசு எந்தவொரு பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.