தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 260 வியாபாரிகளுக்கு அபராதம்-கோவை உணவு பாதுகாப்பு துறை அதிரடி ..!

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார்.

இதில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியர், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தர வரிசை பட்டியலில் கோவை மாவட்டம் சிறப்பான இடத்தை பிடித்து முதல்-அமைச்சர் பாராட்டை பெற்றுள்ளது. கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் 36,769 உரிமங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 39,824 ஆக அதிகரித்து உள்ளது. கோவையில் பாதுகாப்பாக உணவு வழங்குவது குறித்த தர நிர்ணய சான்றிதழ்களை 354 நிறுவனங்கள் பெற்றுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 35 கோவில்களின் அன்னதானம் மற்றும் பிரசாத கூடங்களுக்கு பி.எச்.ஓ.ஜி. தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,048 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை பதியப்பட்ட 1,120 சிவில் வழக்குகளில், மாவட்ட தீர்ப்பு அலுவலர் மூலம் 923 வழக்குகளில் ரூ.92 லட்சத்து 11 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 565 குற்றவியல் வழக்குகளில் 233 வழக்குகளில் நீதி மன்றம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையுடன் ரூ.59 லட்சத்து 75 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 260 வியாபாரிகளுக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 879 வியாபாரிகளுக்கு ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.