தமிழக காவல்துறையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி! தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் மூன்று நாட்களில் கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக ...

குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அடுத்து, ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உயிர்’ அமைப்பின் கோவை மாவட்ட அளவில் தொடங்கப்பட்டுள்ள குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது ...

கோவை : வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில்முனை வோராக்கும் திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 56 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷபி அகமது வெளியிட்டடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, ...

கோவை  : காவல்துறையில் பணியாற்றும் காவலர் முதல் அதிகாரிகள் வரை நேரம் பார்க்காமல் ஓய்வின்றி வேலை பார்ப்பதால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறர்கள்.இதனால் சில காவலர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.மேலும் சிலர் அவர்கள் வீட்டில் நடந்துள்ள துயர சம்பவங்களை மனதில் நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறர்கள் .இதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வெள்ளியங்காடு மற்றும் பெல்லாதி குளங்களில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே ஒரு தரப்பினர் பெல்லாதி குளத்தில் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வலையை ...

மதுரையில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90, கேரட் ரூ.80-க்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தென் மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் அண்மைக் காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. ...

சம்பா: பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப் படை, கப்பல் படைக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தில் சேர்பவர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் ...

பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல் பட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ...

புதுடில்லி : மதம் மாறியவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே ...

போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்: கோவையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை… கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது ...