சென்னை: இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள ...

நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டையின் தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது.   ...

ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு  கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன், பாண்டியன் ...

கோவை நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவை எஸ்.பி ஆய்வு. கோவை மாவட்டம் காரமடையில் கார் ஸ்டேண்டு அருகே மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான சோலையன் ஜீவல்லரி நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இவரது வீடு காரமடை மரியாபுரம் பகுதியில் உள்ளது. சொந்த வேலை ...

50 லட்சம் ரூபாய் ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் நூதன முறையில் திருட்டுகு: டோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை  கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் இளமாறன் (41). இவர் வெளிநாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் மில்லுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சிலிக்கான் ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி ...

கோவை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இவற்றில் சுமாா் 1,500 காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், கோவை மாநகரில் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்பட்டு வந்தது.போதிய அளவில் காவலா்கள் இல்லாததால் குற்றச் சம்பவங்களில் ...

மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்  கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு ...

நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம் வாங்கும் வகையில் ஒரே நாடு,ஒரே தங்கம் விலை என்ற முன்னெடுப்பை இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா தொடங்கியுள்ளது. உலோகங்களில் ஒன்றாக இருந்தாலும், மற்ற உலோகங்களை விட விலையில் நெருங்க முடியாத இடத்தில் இருப்பது தங்கம். தங்கம் மீதான மக்களின் ஈர்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கு அண்மையில் ...

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அதே சமயம் மைசூர் போன்ற இடங்களில் விளையும் தக்காளிகளும் லாரிகள் ...

கோவை: சென்னையில் இருந்து ரயில் மூலம் 1,458 டன் யூரியா கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் ராபி பருவத்தில் மக்காச்சோளம், பயறுவகை பயிர்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்திற்கு தேவையான அனைத்து ...