விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி

விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி கிடைக்காததால், கட்டிட உரிமையாளர்கள் சிலர் கட்டிடம் கட்டத்தொடங்குகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதும், கட்டிடம் கட்டுவது தொடர்வதால், சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக ரங்கே கவுண்டர் வீதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான அனுமதி பெறாத கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்புச்சட்டத்தின் படி 1971 பிரிவின் கீழ் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். உரிய அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அடுத்தடுத்து சீல் வைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.