ஆன்லைன் கேம் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… ஜிஎஸ்டி வரி 28% ஆக உயர்வு..!

ன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இது குறித்து ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கபட்டது. இந்த அமைச்சர் குழு தனது இறுதி கட்ட முடிவை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி இனி அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதமாக உயர்கிறது. இந்த ஜிஎஸ்டி உயர்வால் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.